கூலி (நாவல்)

நாவல்

ஆசிரியர் : முல்க் ராஜ் ஆனந்த்

தமிழில் : ஆர். இராமநாதன்

பக்கங்கள் : 420 / விலை : ₹500

முதல் பதிப்பு : ஜனவரி 2023 (1444 AH)

ISBN : 9789391593452

மூலம் : Coolie (English)

கிராமத்தை விட்டு கட்டாயமாக வெளியேற நேரிடும் கதை நாயகன் முனோ, உலகைத் தன்போக்கில் அறியவும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் விழைகிறான். எதிர்பாராத, அதிர்ச்சியளிக்கிற தொடர் நிகழ்வுகள் ஊடாக அவன் வாழ்வு பயணமாகிறது. மலைகிராமச் சிறுவனின் வாழ்வைக் காலனிய இந்தியாவின் வடபகுதி நகரங்கள் பிய்த்துப்போடுகின்றன.

முல்க்ராஜ் ஆனந்த் இந்நாவலில், உண்மையில் இழப்பதற்கு எதுவுமற்ற கூலிகளான வெகுமக்களின் இரங்கத்தகும் வாழ்நிலையை, உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தைப் பாரபட்சமற்று வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்.