தர்வேஷ்களின் கதைகள்
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஸூஃபி குருமார்கள் கற்பிக்கும் போதனைக் கதைகள்

சிறுகதைகள்ஸூஃபித்துவம்

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

தமிழில் : ரமீஸ் பிலாலி

பக்கங்கள் : 344 / விலை : ₹420

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9789391593247

மூலம் : Tales of the Dervishes: Teaching Stories of the Sufi Masters over the Past Thousand Years

இந்தக் கதைகள் ஒவ்வொரு புள்ளியிலும் நமது பகுத்தறிவின் முன்னனுமானங்களுக்குச் சவால் விடுகின்றன. இதே மூலத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் முல்லா நஸ்ருத்தீன் கதைகளைப் போன்று இவையும் நீங்கள் எந்த அளவுக்குப் பங்கெடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கே பயனைத் தருகின்றன. அவற்றை நீங்கள் வாசிக்கும்போது அவை உங்களை மாற்றுகின்றன, களிப்பூட்டுகின்றன, சங்கடப்படுத்துகின்றன; அல்லது புரியாத புதிராகவும் பூடகமாகவும் இருக்கின்றன; அல்லது, வெறுப்பேற்றுகின்றன.

- டோரிஸ் லெஸ்ஸிங் (இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)