இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்

வாழ்வியல்

ஆசிரியர் : முஹம்மது அல் கஸ்ஸாலி

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 256 / விலை : ₹250

முதல் பதிப்பு : டிசம்பர் 2020 (1442 AH)

இரண்டாம் பதிப்பு : மார்ச் 2021 (1442 AH)

ISBN : 9788193941539

மூலம் : فن الذكر والدعاء عند خاتم الأنبياء (Arabic)

இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைமேதை ஒருவருக்கு முன்னால் நிற்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. வரலாறு நெடுகிலும் அல்லாஹ்வினால் தெரிவுசெய்யப்பட்ட வேறெந்தவொரு நல்லடியாரிடமிருந்தும் இத்தகைய ஆழமும் விசாலமும் கொண்ட பிரார்த்தனைகளின் ஒரு தொகுப்பு நமக்குக் கிடைக்கப் பெறவில்லை.