இஸ்லாத்தில் சமூக நீதி

இஸ்லாம்

ஆசிரியர் : சையித் குதுப்

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 424 / விலை : ₹430

முதல் பதிப்பு : டிசம்பர் 2020 (1442 AH)

இரண்டாம் பதிப்பு : மார்ச் 2021 (1442 AH)

ISBN : 9788193941522

மூலம் : العدالة الاجتماعية في الاسلام (Arabic)

உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும், இக்கருப்பொருள்குறித்து இஸ்லாமிய ஆய்வறிவுப் புலத்தில் எழுந்த முதல் தனி நூல் இதுவென்பதும் சேர்ந்து இப்பிரதியை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.