இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்

இஸ்லாம்

ஆசிரியர் : சையித் குதுப்

தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ

பக்கங்கள் : 264 / விலை : ₹290

முதல் பதிப்பு : ஜூலை 2021 (1442 AH)

ISBN : 9788195349302

மூலம் : خصائص التصور الإسلامي ومقوماته (Arabic)

திருக்குர்ஆனிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டே அந்த முதல் முஸ்லிம் தலைமுறை தம்மைக் கட்டமைத்துக்கொண்டது. மனிதச் சமூகத்தைத் தனித்துவமான முறையில் வழிநடத்தியது. மனிதச் சமூகம் அதற்கு முன்பும் பின்பும் அதைப் போன்றதைக் கண்டதில்லை. அது மனித வாழ்வில் — அதன் அக வாழ்விலும் புற வாழ்விலும் — வரலாறு காணாத தனித்துவம்மிக்க இந்த முன்மாதிரியை நிகழ்த்திக்காட்டியது.

திருக்குர்ஆனே அந்தச் சமூகத்தின் மூலாதாரமாக விளங்கியது. அது மனிதச் சமூகத்தில் தோன்றிய ஆச்சரியமான தலைமுறையாக, திருக்குர்ஆனின் வசனங்களால் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட சமூகமாக இருந்தது. அதைக் கொண்டே அந்தச் சமூகம் வாழ்ந்தது. அதையே முழுமையாகச் சார்ந்திருந்தது.

- நூலிலிருந்து ...