கடல் காற்று கங்குல்

கவிதைகள்

ஆசிரியர் : மின்ஹா

பக்கங்கள் : 112 / விலை : ₹100

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9789391593650

மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.

ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.

- பீ.எம்.எம். இர்ஃபான்