சுயராஜ்யம் யாருக்கு?

அரசியல்

ஆசிரியர் : ம. சிங்காரவேலு

பதிப்பு-ஆசிரியர் : க. காமராசன்

பக்கங்கள் : 208 / விலை : ₹200

முதல் பதிப்பு : ஜனவரி 2022 (1443 AH)

ISBN : 9789391593001

தோழர் ம. சிங்காரவேலர் எழுதிய இந்நூல் தமிழ் அரசியல் சிந்தனை வரலாற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இன்றுவரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியத் தேசியவாதம், இன்று ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள இந்துத் தேசியவாதம் ஆகியவற்றின் ‘சுயராஜ்யக்’ கற்பிதம் பற்றி ஆழமான அகப்பார்வைகளைத் தந்து சிந்திக்கத் தூண்டும் ஆக்கம். இந்தியத் தேசியவாதம் பற்றி இந்நூல் எழுப்பும் மிக அடிப்படையான கேள்வியை ஆழப்படுத்துவதும் அகலப்படுத்துவதும் நம் காலத்தின் தேவை.

தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழில் வெளிவந்த முதல் நூல், இப்போது விரிவான பதிப்புக் குறிப்புகளுடன் செம்பதிப்பாக...