திருக்குர்ஆனின் ஒளியில் (ஜுஸ்உ அம்ம)
மையக்கருத்தினூடாக சூறாக்களைப் புரிந்துகொள்ளல்

திருக்குர்ஆன் விரிவுரை

ஆசிரியர் : ரிஷாட் நஜிமுடீன்

பக்கங்கள் : 272 / விலை : ₹390

முதல் பதிப்பு : ஜூலை 2022 (1443 AH)

ISBN : 9789391593414

அல்லாஹ்வின் வாக்கு பிழையோ சிக்கலோ அற்றது. எனினும், அதைக் குறித்த மனிதப் புரிதல்கள் குறைகளும் பிழைகளும் கொண்டவை. எனவேதான், வரலாற்றில் ஆயிரக்கணக்கான திருக்குர்ஆன் விளக்கவுரைகள் தோன்றிய வண்ணமிருக்கின்றன. அவ்வரிசையில் இச்சிறிய நூலும் இணைந்துகொள்கிறது.

இந்நூல் 'ஜுஸ்உ அம்ம' உடைய ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதன் மையக்கருத்துக்கு அழுத்தம்கொடுத்து விளக்கும் முறைமையைக் கையாள்கிறது. இது நவீனகால அறிஞர்கள் அதிகம் வலியுறுத்தும் "மையக்கருத்தினூடாக சூறாக்களைப் புரிந்துகொள்ளல்" (அத்தப்சீருல் மவ்ளூஈ லி சுவரில் குர்ஆன்) எனும் ஆய்வுமுறைமையாகும். இம்முறைமையினூடாக நாம் சூறாக்களை ஆழமாகவும் இலகுவாகவும் புரிந்துகொள்ள முடியும் என்பதோடு, சூறாக்களின் வசனங்கள், பகுதிகளுக்கிடையில் இழையோடும் இறுக்கமான பிணைப்புகளை நன்கு விளங்கிக்கொள்ளவும் முடிகிறது.