இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)
அஹ்மது இப்னு தைமிய்யா

வரலாறுமொழிபெயர்ப்பு

ஆசிரியர் : மௌலானா அபுல் ஹசன் அலீ நத்வீ

தமிழில் : ஷாஹுல் ஹமீது உமரீ

பக்கங்கள் : 420 / விலை : ₹550

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

ISBN : 9789391593315

மூலம் : رجال الفكر والدعوة في الإسلام (Arabic)

வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை.

நூலின் இந்த இரண்டாம் பகுதி இப்னு தைமிய்யா வாழ்ந்த காலகட்டம், அவரது வாழ்க்கை, சிறப்பியல்புகள், அவரது நூல்களின் தனித்தன்மைகள், அவர் எதிர்க்கப்பட்டதற்கான காரணிகள், அவரது ஆன்மிகப் பரிமாணம், அவரது பல்பரிமாண மறுமலர்ச்சிப் பணிகள், அவரின் முதன்மை மாணவர்கள் என விரிவாகப் பேசியுள்ளது.

இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.