எங்கள் புத்தகங்கள் மீது நீங்கள் காதல் வயப்படுவது உறுதி!
சீர்மைக்கு, பதிப்பித்தல் என்பது புத்தகங்களை அச்சிடுவதுடன் முடிவுறும் பணி அல்ல. வாசிப்பின் வழியாகக் கேள்விகளை எழுப்பவும், சிந்தனைகளைப் பகிரவும், சமூகத்தையும் மனித அனுபவத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கும் அறிவுச் செயற்பாடு அது. இந்த நோக்கில், நூல்கள், வாசிப்பு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள், மின்னிதழ் ஆகியவற்றை இணைக்கும் ஓர் உயிர்ப்புள்ள வாசிப்புச் சூழலை சீர்மை உருவாக்கிவருகிறது.