இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும்

கட்டுரைகள்மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : டேனியல் ஹகீகத்ஜூ

தமிழில் : நாகூர் ரிஸ்வான்

பக்கங்கள் : 86 / விலை : ₹90

முதல் பதிப்பு : ஜனவரி 2023

ISBN : 9789391593926

இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட முறைமையிலிருந்தும் மூலத்திலிருந்தும் வருபவை. அவற்றுக்கு நாமும் முறைசார்ந்துதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியே எதிர்கொண்டால் அதற்கு முடிவே இல்லை. நாம் வேரையும் மூலத்தையும் சரியாக இனங்கண்டு அதை உரிய விதத்தில் எதிர்கொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்பார்களே, அதுதான் இந்த நூலின் நோக்கமும்.