மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா

அரசியல்கட்டுரைகள்

ஆசிரியர் : நாகூர் ரிஸ்வான்

பக்கங்கள் : 128 / விலை : ₹150

முதல் பதிப்பு : ஜனவரி 2022

ISBN : 9789391593582

இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது.

இந்நிலையில், முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த விமர்சனங்களை அவர்களின் கண்ணோட்டத்திலிருந்தே முன்வைக்கிறது இந்நூல். சமுதாய அக்கறையுள்ள அனைவரும் அவற்றைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் சமூகத்தில் நிறுவனமயமாகியிருக்கும் இஸ்லாமோ ஃபோபியாவின் வெளிப்பாடுகளைக் காத்திரமாக விசாரணை செய்கின்றன. பொதுப்புத்தியை, ஆதிக்கக் கருத்தியலை, பொதுநீரோட்டம் எனும் கருத்தமைவைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

முஸ்லிம் விவகாரங்களைப் புரிந்துகொள்ள முயல்வோர் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.