இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே அறபு நாவலாசிரியரான நஜீப் மஹ்ஃபூழின் கொண்டாடப்பட்ட ஆக்கங்களில் ஒன்று இது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தி அறபியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற சிறப்பும் இதற்குண்டு. நாவல் வெளிவந்த வருடமே திரைப்படமாகவும், பிறகு தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது.
‘நம் சேரிப் பிள்ளைகள்’ என்ற நாவலுக்குப் பிறகு தமிழில் வெளிவரும் நஜீப் மஹ்ஃபூழின் இரண்டாவது நாவல் இது.