குர்ஆனிய உலகக் கண்ணோட்டம்
மானுடச் சீர்திருத்தத்தின் தொடக்கப்புள்ளி

கட்டுரைகள்மொழிபெயர்ப்புஇஸ்லாம்

ஆசிரியர் : அப்துல் ஹமீது அபூசுலைமான்

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான், எம்.கே. இஹ்ஸான்

பக்கங்கள் : 78 / விலை : ₹100

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9788119667673

மூலம் : Al-Ru’yah a-Kawniyah al-Hadhariyah al-Qur’aniyah (Arabic)

இஸ்லாமிய உலகக் கண்ணோட்டமே இஸ்லாத்தின் கோட்பாடுகளும், பெறுமானங்களும், எண்ணக்கருக்களும் கிளைபிரியும் வேராகும். அவற்றின் இயல்பை வரையறை செய்யக்கூடியதாகவும், அவற்றின் மூலாதாரத் தன்மையையும் முழுமொத்த இலக்குகளையும் பிரதிபலிக்கக்கூடியதாகவும் அக்கண்ணோட்டம் அமைந்துள்ளது. எப்போதும் இக்கண்ணோட்டம் தெளிவாகவும், மயக்கங்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும். இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், முரண்பாடுகளோ ஊகங்களோ அற்றதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தனிநபர்களையும் சமூகத்தையும் இயக்குகின்ற உந்துசக்தியாகவும், உள்ளார்ந்த நம்பிக்கை பலமாகவும் இருக்கும். எப்போது இக்கண்ணோட்டம் தெளிவற்றதாகவும், போலித்தன்மை நிரம்பியதாகவும் மாறுகிறதோ, அப்போது முஸ்லிம் சமூகத்தை இயக்குகின்ற அதன் கோட்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லாது போய்விடும்.