தொழுகையை மீளக் கண்டடைதல்
அல்லாஹ்வுடனான உரையாடலைச் சீராக்கிட...

வாழ்வியல்மொழிபெயர்ப்புஇஸ்லாம்

ஆசிரியர் : அஹ்மது பஸ்ஸாம் சாஈ

தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்

பக்கங்கள் : 182 / விலை : ₹240

முதல் பதிப்பு : டிசம்பர் 2024

ISBN : 9789391593674

மூலம் : Idarah al-Salah (Abridged)

ஓர் இறைநம்பிக்கையாளரின் வாழ்வில் ஈமானுக்கு அடுத்து அதிமுக்கியமான ஒன்று என்றால் அது தொழுகைதான். இறைவனுடனான சந்திப்பு என்னும் பொருளில் நபிகளார் அதனை ‘ஆன்மிக மிஃறாஜ்’ என்றழைத்தார்கள்.

கவனச் சிதறல் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலருக்கும் தொழுகை பல சந்தர்ப்பங்களில் சம்பிரதாயமான, இயந்திர கதியிலான ஒன்றாக ஆகிவிடுகிறது. மீண்டும் அதனை உயிரோட்டமுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றிட விரும்புகிறீர்களா?

இந்நூல் அதற்கு மிகச் சிறந்த துணையாக அமையும்!