இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
நேர்வழிநடந்த ஃகலீஃபாக்களின் ஆட்சியமைப்பு, உமையாக்களின் எழுச்சியை அடுத்து பரம்பரை ஆட்சியாகவும் இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து பிறழ்ந்த ஆட்சியாகவும் மாறிவிட்டிருந்தது. அதனை மீண்டும் சரியான அடிப்படைகளின் மீது நிறுவிய ஒருவராக மதிக்கப்படும் உமர் இப்னு அப்துல் அஸீஸின் வரலாற்றுப் பின்னணி, அருள்நிறைந்த வாழ்வு, இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு அவரின் பங்களிப்புகள் ஆகியவை பற்றி அறிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த நூல் இது.