துகளின் ரகசியம் கண்டறியப்படும்போது
படைப்புகள் அனைத்தின் ரகசியமும்
தெளிவாகிவிடுகின்றது.
சத்திய எதார்த்தத்துடன் நீ கொண்டுள்ள
அவசியமான ஒருமையை நீ உணர்வதற்கு
உனது ‘பிரிந்த/தனித்த’ சுயத்தை நீ கைவிட வேண்டிய
அவசியம் இல்லை, ஏனெனில் அது
ஒருபோதும் இருந்ததே இல்லை.
மாறாக, அனைத்தின் இருப்பான உள்ளமையுடன்
உனது ஒருமையை நீ உணர்வதற்கு நீ உனது
உண்மையான சுயத்தை அறிதல் வேண்டும்.
அடிப்படையில் எதுவும்
மாறுவதில்லை.
நீ உன்னை அறியும்போது
‘அறியாமை’ மறைந்துவிடுகிறது,
பொருட்கள் உண்மையில் எப்படி இருக்கின்றன
என்ற எதார்த்தம் தெளிவாகிறது, அவ்வளவே.