வரலாறு புரண்ட கதை

நாவல்இஸ்லாம்

ஆசிரியர் : முஹம்மது ஹசன் அல்ஹிம்ஸீ

தமிழில் : அஷ்கர் அரூஸ்

முதல் பதிப்பு : டிசம்பர் 2025

ISBN : 9788199084445

மூலம் : الدين الحق (Arabic)

பக்கங்கள் : 124

₹140

இஸ்லாமியச் சமூகத்தை அழித்தொழித்து, அதன் மரபுகளையெல்லாம் நிர்மூலமாக்குவதற்கு முயன்ற கறைபடிந்த வரலாறுதான், மங்கோலிய- தாத்தாரியர்களின் வரலாறு. ‘நமது பெறுமதிமிக்க பாரம்பரியங்களை அழித்த கவலைக்கிடமான அந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்கு என் தாய் என்னைப் பெற்றிருக்காமல் இருந்திருக்கக் கூடாதா!’ எனச் சமகாலத்து அறிஞர் இப்னு அஸீர் அங்கலாய்க்கும் சோக வரலாறு அது. எனினும், அல்லாஹ் அவர்களைக் கொண்டே இந்த மார்க்கத்துக்குப் பாதுகாப்பளித்தான். பௌதிக விதிகளுக்கு முரணாகத் தோன்றும் இந்த அற்புதமான சமூக மாற்றம் எப்படி நடைபெற்றது என்பதை அழகுறச் சித்தரிக்கும் நூல்தான் வரலாறு புரண்ட கதை.